இந்தியா

கர்நாடகா: சக்தி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

Malaimurasu Seithigal TV

கர்நாடகா: கர்நாடகாவில், பெண்கள் இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றிபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் போல, கர்நாடகாவிலும் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. 

தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி. அரசு பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு சக்தி என பெயரிட்டு, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

பெங்களூரில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இத்திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கும் பயண அட்டையை இருவரும் வழங்கினார்கள். 

மேலும், இதற்கான பயண அட்டையை பெற, sevasindhu.karnataka.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பும் வெளியாகியுள்ளது.