இந்தியா

குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில், கார்கே-வை வேண்டுமென்றே அவமரியாதை செய்தனர்!- எம்பி ஜெய்ராம் ரமேஷ்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வழங்கப்பட்ட இருக்கை, வேண்டுமென்றே அவமரியாதை செய்வது போன்ற செயலாக இருக்கிறது என, எம் பி ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி பதிவிட்டிருக்கிறார்.

Malaimurasu Seithigal TV

நேற்று, இந்தியாவின் குடியரசு தலைவர் பதவியேற்றார் திரௌபதி முர்மு. சுதந்திர இந்தியாவின் 15வது குடியரசு தலைவரான முர்முவிற்கு, அனைவரும் பாராட்டுகளும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்கட்சி தரப்பில் இருந்து பல எதிர்மறையான கருத்துகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

குடியரசு தலைவர் முர்முவின் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, முதல் வரிசயின் இடது புறத்தில் ஓரமாக அமர்ந்திருந்தார். அவரது பதவிக்கு ஏற்றாற்போல இடம் கொடுக்காமல், ஏன் இப்படி வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறீர்கள்? என, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெலியிட்டிருக்கிறார். அதில், “இந்த கடிதம் மரியாதைக்குறிய மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கையா நாய்டுவிடம், திரிணாமுல் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளாளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” என்று எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜெயராம், இது குறித்து, “இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் என்ற மரியாதை கொடுக்காமலும், முன்னுரிமைக்கான உத்தரவை மீறி, அவரை ஓரமாக அமர வைத்தது, வேண்டுமென்றே அவரை அவமதிக்க செய்த ஒன்றாகத் தெரிகிறது” என ரமேஷ் எழுதியிருந்தார்.

எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முர்மு பதவியேற்கும் அந்த பாராளுமன்றத்தின் செண்ட்ரல் ஹாலில், முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும், இடது ஓரமாக அமர்ந்திருந்ததால், இந்த சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ஆனால், பாஜக தலைவர் ஜே பி நட்டா மற்றும் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகிய இருவருக்கும், முன்னிருக்கைகளேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், காங்கிரஸ் இதனை "உள்துறை அமைச்சகத்தின் வேண்டுமென்றே அவமதிப்பு" என குற்றம் சாட்டியுள்ளது.

குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றாலும் கார்கே முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனவே நெறிமுறைகளை மீறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.