நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43ஆயிரத்து 903 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 21லட்சத்து 81ஆயிரத்து995 ஆக அதிகரித்தது.
நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்படவர்களில் 219 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 4 ஆயிரத்து 874 பேர் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.