இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கடிதம்...!

Malaimurasu Seithigal TV

டெல்லி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனையில் விசாரணை கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி மகளிர் ஆணைத்தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி ப்ரீமொடாய், மனைவியின் ஆதரவுடன் மாணவியை வன்கொடுமை செய்ததில் அவர் கர்ப்படைந்தார். மாணவியை சந்திக்க மருத்துவமனையில் இரவு,பகலாக ஸ்வாதி தர்ணாவில் ஈடுபட்ட போதும் அவர் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து மாணவியை சந்திக்க அனுமதிக்கவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.