இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்குறவங்களுக்கு இப்போ ஒரு சூப்பர் நியூஸ்! 2025-ல், Henley Passport Index-ன்படி, இந்திய பாஸ்போர்ட் உலக தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி, 77-வது இடத்தைப் பிடிச்சிருக்கு. இதனால, இந்தியர்கள் இப்போ 59 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது விசா ஆன் அரைவல் (Visa on Arrival) மூலமோ பயணிக்க முடியும்.
Henley Passport Index, உலகில உள்ள பாஸ்போர்ட்களை, அவை விசா இல்லாமல் பயணிக்க முடியுற நாடுகளின் எண்ணிக்கையை வைச்சு தரவரிசைப்படுத்துது. 2025-ல், இந்திய பாஸ்போர்ட் 85-வது இடத்திலிருந்து 77-வது இடத்துக்கு முன்னேறியிருக்கு, இது இந்தியாவுக்கு இதுவரை இல்லாத பெரிய முன்னேற்றம்.
இப்போ, இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது Visa On Arrival மூலமா பயணிக்க முடியும். இது ஒரு சாதனையா இருந்தாலும், சிங்கப்பூர் (193 நாடுகள், முதல் இடம்), ஜப்பான், மற்றும் தென் கொரியா (190 நாடுகள்) மாதிரியான நாடுகளோடு ஒப்பிடும்போது இன்னும் வளர வேண்டிய இடம் இருக்கு. ஆனாலும், இந்த முன்னேற்றம் ஒரு முக்கியமான மைல்கல்.
விசா இல்லாமல் பயணிக்கலாம் (Visa-Free Countries):
ஆப்பிரிக்கா:
அங்கோலா
கென்யா
மடகாஸ்கர்
மொரிஷியஸ்
ருவாண்டா
செனகல்
ஆசியா:
பூட்டான்
ஈரான்
கஜகஸ்தான்
மகாவ் (Macao)
நேபாளம்
பிலிப்பைன்ஸ்
தாய்லாந்து* (Thailand Digital Arrival Card (TDAC) 3 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்)
ஓஷியானியா (பசிபிக் தீவுகள்):
குக் தீவுகள்
ஃபிஜி
கிரிபதி
மைக்ரோனேசியா
நியு
வனுவாட்டு
கரீபியன்:
பார்படோஸ்
டொமினிகா
கிரெனடா
ஹைட்டி
ஜமைக்கா
மாண்ட்செராட்
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
டிரினிடாட் மற்றும் டொபாகோ
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
விசா ஆன் அரைவல் (Visa on Arrival Countries):
ஆப்பிரிக்கா:
புருண்டி
கேப் வெர்டு தீவுகள்
கொமோரோ தீவுகள்
ஜிபூட்டி
எத்தியோப்பியா
கினி-பிஸ்ஸாவ்
மொசாம்பிக்
நமீபியா
சியரா லியோன்
தான்சானியா
ஜிம்பாப்வே
செஷல்ஸ்* (Travel Authorisation (TA) முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்)
ஆசியா:
கம்போடியா
இந்தோனேசியா
ஜோர்டான்
லாவோஸ்
மாலத்தீவு
மங்கோலியா
மியான்மர்
கத்தார்
இலங்கை
ஓஷியானியா (பசிபிக் தீவுகள்):
மார்ஷல் தீவுகள்
பலாவ் தீவுகள்
சமோவா
திமோர்-லெஸ்டே
துவாலு
தென் அமெரிக்கா:
பொலிவியா
கரீபியன்:
செயின்ட் லூசியா
குறிப்பு: விசா ஆன் அரைவல் பெறும்போது, பயணிகள் பொதுவாக திரும்பும் விமான டிக்கெட், தங்குமிட ஆவணங்கள், மற்றும் பயண செலவுகளுக்கு போதுமான பணம் இருக்குறதற்கான ஆதாரம் காட்ட வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாட்டுக்கும் கட்டணம், விசாவின் செல்லுபடி காலம், மற்றும் தங்கும் காலம் வேறுபடலாம். உதாரணமா, செஷல்ஸ்-க்கு பயணிக்கும்போது, விசாவுக்கு பதிலா Travel Authorisation (TA) முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.