கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்யும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம், ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், வரும் மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் முன்னதாக வெளியிட்டது.
இந்நிலையில் மீதமுள்ள வேட்பாளர்களை இறுதிசெய்யும் காங்கிரசின் தேர்தல் குழுக் கூட்டம், வரும் 4ம் தேதி டெல்லியில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நன்றி தெரிவித்த இபிஎஸ்....!!!