இந்தியா

குறைந்த தாய்- சேய் இறப்பு விகிதம்...பிரதமர் பெருமிதம்!!!

Malaimurasu Seithigal TV

பேறு கால தாய், சேய் இறப்பு விகிதம் 2014-16-ல் ஒரு லட்சத்துக்கு 130-ஆக இருந்த நிலையில் 2018-20-ல் ஒரு லட்சத்துக்கு 97-ஆக குறைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  

மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மிகவும் வலுவாக இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.  இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.  மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன" என்றும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.