மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது இதில் அஜித் பவார் அவருடன் பயணித்த இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பராமதியில் நடக்க இருந்த தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் சென்ற போது இந்த விபத்து நடைபெற்றது.
காலை 8.15 க்கு மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 8. 45 க்கு பராமதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி மற்றும் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இடம் தகவல் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த அஜித் பவாரின் உடல் பராமதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். விபத்து நடந்த உடனேயே அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.எனினும், விமானத்தில் பயணித்த அஜித் பவார் விபத்தில் மரணம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அஜித் பவாரின் உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி “அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார், அடித்தள மக்களுடன் வலுவான தொடர்பு கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த கடின உழைப்பாளி ஆளுமையாக அவர் பரவலாக மதிக்கப்பட்டார். நிர்வாக விஷயங்களைப் பற்றிய அவரது புரிதலும், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் குறிப்பிடத்தக்கது. அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.