இந்தியா

2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தும் பணிப்பெண்.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ

2 வயது குழந்தை தாக்கப்பட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Suaif Arsath

மத்திய பிரதேசத்தில் 2 வயது குழந்தையை, பணிப்பெண் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது.

ஜபல்பூரை சேர்ந்த தம்பதி தங்களது 2 வயது  குழந்தையின் நடவடிக்கை மற்றும் உடல்நலம் மோசமடைந்து வருவதை அறிந்து, மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்ததில் அவனது உடம்பில் ஆங்காங்கே வீக்கம் மற்றும் காயங்கள் காணப்பட்டுள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்,  இச்செயலுக்கு  குழந்தையை பராமரிக்கும் பணிப்பெண் தான் காரணம் என அறிய, மருத்துவரின் அறிவுரையின் பேரில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.

அதனை ஆய்வு செய்வதில், அப்பெண், குழந்தையின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்குவது தெரிந்ததை அடுத்து, தம்பதி அளித்த புகாரின் பேரில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.