இந்தியா

மாமியாருக்கு வந்த கொரோனா,..இவளுக்கும் வரட்டும் என்று மருமகளை கட்டிப்பிடித்த கொடுர மாமியார்,..! 

Malaimurasu Seithigal TV

தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்டம் நெமிலி குட்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாகவே அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனையும், மோதலும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 


இந்நிலையில் அந்த பெண்ணின் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தனக்கு மட்டும் கொரோனா பாதிப்பு வந்ததும் தனது மருமகளுக்கு கொரோனா வராததும் மாமியாருக்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக தனது  மருமகளுக்கும் கொரோனா பரவட்டும் என்று அவரை கட்டிபிடித்துள்ளார். மேலும் இது சிறிது நாட்களாக தொடர்ந்துள்ளது.இதனால் அவரது மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கொரோனா பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.