இந்தியா

மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் குறித்து நாகர்கோவில் நபரிடம் விசாரணை...

Malaimurasu Seithigal TV

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் கொண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் பணிபுரியும் வட மாநில வாலிபரை பிடித்து கோட்டாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வட மாநில நபரின் கைபேசியில் இருந்து மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் தொடர்பு கொண்டதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் குண்டு வெடிப்பு :

மங்களூரு நகரின் நாகுரி பகுதியில் ஆட்டோ ஒன்று மர்மமான முறையில் வெடித்தது,இதில் ஆட்டோ 
தீப்பிடித்து எரிந்தது . மேலும் ஆட்டோவின் பின்பகுதி இருக்கை சின்னாபின்னமாக கடந்தது. இதில் பயணம் செய்த பயணி உட்பட ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.நாசவலை ஈடுபட்டவரின் அடையாளம் தெரிந்தது. 

நாகர்கோவில் நபரிடம் விசாரணை :

 சிவமொக்க மாவட்டம் தீர்த்தகல்லி தாலுகா பகுதியை சேர்ந்த ஷாரிக் வயது(22) என்பது தெரியவந்தது. இவர் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்ததும் தெரியப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .அதேபோன்று கோவையில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வருகின்றனர். அது தொடர்பாக தமிழக டிஜிபி, கர்நாடகா டிஜிபிகள் ,ஆலோசனை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அஜிம் ரகுமான் என்பவர் ஷாரிகுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சந்தேகிக்கப்படுகின்றனர். அதன் தொடர்பாக அஜிம் ரகுமானை குமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர் . இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் இந்த விசாரணையில் அவர் தெரிவிக்கின்ற பதிலை வைத்து தான்  என்ன நடந்தது என்பதை கூற முடியும் என போலீசார் தரப்பில் லாபத்தில் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநில மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த வரிடம் தொலைபேசியில் பேசியதாக நாகர்கோவில் கோட்டார் போலீசாரால் விசாரணை செய்யப்பட்டுவரும்  அசாம் மாநில இளைஞர் அஜின் ரகுமானின் செல்போன் ஆய்விற்காக எஸ் ஐ யூ எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.