இந்தியா

மனுதர்ம சாஸ்திரத்தால் இருதரப்பினரிடையே மோதல்...!

Tamil Selvi Selvakumar

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் நடுரோட்டில் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கற்களை கொண்டு தாக்குதல்:

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுதர்ம சாஸ்திரம் கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பாஜகவினர் சாலையோரம் இருந்த கற்களை எடுத்து, எதிர் தரப்பினர் மீது வீசி தாக்குதல் நடத்தினர். 

தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்:

இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இருதரப்பினரும் நடுரோட்டில் கற்களை வீசி மாறி மாறி தாக்கிக் கொண்டதாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கற்கள் பட்டதாலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த நபர் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.