இந்தியா

பாரம்பரிய மதிப்பை இழந்துள்ள ஜாலியன்வாலாபாக் கட்டிடம்... பலர் கண்டனம்...

பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் வளாகம் புதுபிக்கப்பட்டுள்ளதால் அது தன் பாரம்பரிய மதிப்பை இழந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் வளாகம் புதுபிக்கப்பட்டுள்ளதால் அது தன் பாரம்பரிய மதிப்பை இழந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜாலியன்வாலா பாக்கில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக கு நினைவிடம் அமைக்கப்பட்டது. பஞ்சாபின்‌ கட்டிடக்‌ கலை அடிப்படையில்‌ நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, சாஹிதி கிணறு சீரமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின்‌ வசதியை கருத்தில்‌ கொண்டு நடைபாதைகள்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்தை பிரதமர்‌ மோடி இரு தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இந்த நிலையில் சீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் வரலாற்றை அழிப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். நவீனமயமாக்குவதால், நினைவு சின்னங்கள், அதன் பாரம்பரிய மதிப்பை இழப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.