இந்தியா

அக்டோபரில் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்...!

Tamil Selvi Selvakumar

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் பி.எஸ்.சி நர்சிங் ஆகிய மருத்துவ படிப்புகளில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற அக்டோபர் 10ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் 7ம் தேதி நீட் தேர்வு  முடிவு வெளியான நிலையில், கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நடப்பாண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ம் தேதி தொடங்கவுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. 

இதேபோல் அகில இந்தியா கோட்டாவின் கீழ் நிரப்பப்படும் 15 சதவீதம் மாணவர் சேர்க்கை அக்டோபர் 11ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், மாநில அளவிலான மருத்துவ கவுன்சிலிங் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, 2ம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 2 முதல் 10ம் தேதி வரையிலும், மாநிலங்களில் நவம்பர் 7 தொடங்கி 18ம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளநிலை மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் கமிட்டி வெளியிட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.