இந்தியா

அமித்ஷாவின் காஷ்மீர் பயணத்தை விமர்சித்த மெகபூபா முப்தி

காஷ்மீரில் அமித்ஷா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தை, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

காஷ்மீரில் அமித்ஷா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தை, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டினார். அவரது இந்த பயணத்தை மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், உள்துறை அமைச்சர் , ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவதும், மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் புதிதல்ல எனவும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பல மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்து, அவை இன்று செயல்பாட்டிலும் உள்ளன என குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த ஒப்பனை நடவடிக்கைகள் இங்குள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என கூறியுள்ள மெகபூபா, ஒரு கட்டமைக்கப்பட்ட நடவடிக்கையான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், மாநிலத்தை மத்திய அரசு ஒரு பெருங்குழப்பத்தில் தள்ளியிருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.