இந்தியா

புறாக்களை கொன்று சிக்கன் என விற்ற நபர்கள்... மும்பையில் நடந்த அவலம் அம்பலம்...

கூறை மேல் புறாவை சிக்கன் என ஏமாற்றி விற்ற 8 நபர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதனால், மும்பையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

மும்பை | ஒரு உணவகத்திற்கு புறாக்களை கொன்று எரித்து, அவற்றை சிக்கன் கறி என அருகில் இருந்த உணவகத்திற்கு விற்றதாகக் கூறி, 8 நபர்களை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சியோன் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் அபிஷேக் சாவந்த் என்பவரும், அவருக்கு தொடர்புடைய மேலும் 7 நபர்கள் மீதும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான, ஹரேஷ் கல்காணி என்பவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அவரளித்த புகார் கூறுவது என்னவென்றால், புகாரளிக்கப்பட்ட சாவந்த் என்பவர், தனது மொட்டைமாடியில், புறாக்களை கூண்டில் அடைத்து வைத்திருப்பதையும், அவற்றை தோலுரித்து பக்கத்து உணவகத்திற்கு விற்றதை தான் கண்டதாகவும், அதனை நிரூபிக்க, தன்னிடம் இது தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கடந்த மார்ச் தொடங்கி தற்போது வரை இந்த அவலம் நடந்து வருவதாகவும் தெரிவித்த புகார்தாரர் கல்காணி, இது பற்றி அப்பகுதியினருக்கு முன்பே தெரியும் என்றும், அதனை மூடி மறைத்து அவர்கள் அமைதி காத்ததாகவும் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக மும்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐபிசி 428 மற்றும் 447-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தாலும், யாரும் இது தொடர்பாக கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அவலங்களால், பொது மக்கள் அதிர்ச்சியில் அழ்ந்துள்ளனர்.