இந்தியா

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய மோடி ...!

Malaimurasu Seithigal TV

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹலுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

அப்போது இந்தியா, நேபாளம் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் மறுஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நேபாள பிரதமரின் இந்திய பயணத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் நேபாளம் முக்கிய பங்குதாரராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.