இந்தியா

"3வது முறை பாஜக ஆட்சி அமைந்தால், உலகளவில் 3வது நாடக முன்னேறும்" பிரதமர் மோடி பேச்சு!

Malaimurasu Seithigal TV

3-வது முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என பிரதமா் மோடி கூறியுள்ளார்.

டெல்லி பிரஹதி மைதான் பகுதியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தொடா்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் கட்டப்படும் எனவும், சிறந்த வேலைகள் குறித்து விமர்சிப்பதையும், நிறுத்துவதையும் சிலர் நோக்கமாக கொண்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும், 'கடமை பாதை' அமைப்பது குறித்த விவகாரம் நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டது. ஆனால், கடமை பாதை அமைக்கப்பட்ட பின் அதே மக்கள் இது நல்லது என கூறினர் என குறிப்பிட்ட பிரதமா், பாரத் மண்டபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இங்கு வந்து கருத்தரங்கில் விரிவுரை வழங்க வரும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தொடா்ந்து பேசுகையில், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால்  உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என உறுதியளித்த அவா், இது மோடியின் உத்தரவாதம் எனவும் தொிவித்துள்ளார்.