இந்தியா

குரங்கு அம்மை - அவசர ஆலோசனை கூட்டம்:

Malaimurasu Seithigal TV

குரங்கு அம்மை குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் சுகாதார சேவைகள் இயக்குநரத்தால் நடத்தப்படும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு:

டெல்லியில் வசிக்கும் 34 வயது நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டார்.  இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம் குரங்கம்மையை உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்" டெல்லியில் குரங்கு அம்மையின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்என்ஜேபி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு என தனி வார்டை உருவாக்கியுள்ளோம். நோய் பரவலைத் தடுக்கவும், டெல்லி மக்களை பாதுகாக்கவும், நம்மிடம் சிறந்த குழு உள்ளது." என கூறியுள்ளார். 

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை :

முன்னதாக கேரளாவில் 3 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் குரங்கம்மை பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு ஆலோசனைக் கூட்டம் : 

மெது மெதுவாக உலக நாடுகளில் வேகமெடுக்கும் இந்த குரங்கம்மை நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதன் பிறகு அந்நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அவரச நிலையாக அறிவிப்பு : 

அப்போது பேசிய அவர், தற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதாகவும், ஆய்வாளர்களின் கருத்துப்படி குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறவிப்பதாகவும்  கூறினார்.  மேலும், குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உலக நாடுகளை கேட்டுக்கொண்டார். 

உயர் அவசர ஆலோசனைக் கூட்டம்:

டெல்லி பாதிப்பை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.  இதனால் குரங்கு அம்மை குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் சுகாதார சேவைகள் இயக்குநரத்தால் நடத்தப்படும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.