உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு, 7 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சர்வதேச அளவில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் செல்வந்தர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
64 வயதான முகேஷ் அம்பானி, இந்தப் பட்டியலில் 11-வது இடத்தை பிடித்துள்ளார். எலன் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.