இந்தியா

மும்பை பங்கு சந்தை: வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 674 புள்ளிகள் சரிவு!!

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 650 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 674.38 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 251.65 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 248 புள்ளிகள் வரை சரிந்து 17 ஆயிரத்து 400 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் அதன் எதிரொலியாகவே மும்பை பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.