இந்தியா

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு: அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி நாளை ஆஜர்.!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால்  அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே டெல்லியில் நாளை அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜராகவுள்ளார். அவருடன் இணைந்து சக காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் காங்கிரஸ் பணிக்குழுவினரும் பேரணியாக செல்ல உள்ளனர்.

இதனிடையே, அரசியல் உள்நோக்க செயலை கண்டித்து, நாடு முழுவதும் உள்ள 25 அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.