இந்தியா

இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய நவ்ஜோத் சிங் சித்து ...!!

Malaimurasu Seithigal TV

கொலை வழக்கில் தண்டனையை நிறைவு செய்துவிட்டு வெளியில் வந்துள்ள நவ்ஜோத் சிங் சித்து தற்போது அரசியலில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்துள்ளார்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மற்றும் துணை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார். இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நவஜோத் சிங் சித்துவின் இந்த நகர்வானதுக்கு அவரது அரசியல் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, கடந்த 1988-ம் ஆண்டு பஞ்சாபின்  வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் நவ்ஜோத் சிங் சித்து தாக்கியதால் 65 வயதான குர்னாம் சிங் உயிரிழந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும் சிறையில் அவரது நன்னடத்தையை கணக்கில் கொண்டு  முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.