இந்தியா

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு வந்த கொலை மிரட்டல்!!!

Malaimurasu Seithigal TV

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

என்சிபி தலைவர் சரத் பவாரின் சில்வர் ஓக் இல்லத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.  அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி 294, 506(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

-நப்பசலையார்