இந்தியா

நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள்… தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணை…

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுத்தேர்வு நடத்த கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

Malaimurasu Seithigal TV

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுத்தேர்வு நடத்த கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், நீட் வினாத்தாள்  தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளது. எனவே இந்த தேர்வினை ரத்து செய்து, மறுத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர்  கடந்த மாதம் 29ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

அதில் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை 2021 நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இனி நடக்கும் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் இருக்க, தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை பொருத்தவும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடவும் கோரப்பட்டது. மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.