``அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இல்லை" - நேகா போராவின் பிடிவாதம்.. பின்னணி என்ன? twitter
இந்தியா

``அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இல்லை" - நேகா போராவின் பிடிவாதம்.. பின்னணி என்ன?

"நாம் அரசிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றால், யாருடைய அமைதியைக் காக்கிறோம்?" எனக் கேள்வி எழுப்பி, அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் நேகா.

Antony Ajay R

அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா, சிறப்பு நிர்வாக நீதிபதி முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நேஹா போராவுக்கு ஒரு ஜாமீன்தாரருடன் ரூ.10,000 தனிநபர் பிணைப்பத்திரம் சமர்ப்பிக்கக் கோரி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில், "நான் யாருடைய அமைதியைக் காக்குமாறு கேட்கப்படுகிறேன்?" எனக் கேள்வி எழுப்பிய நேஹா போரா, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

BNSS சட்டத்தின் 126வது பிரிவின் கீழ் அக்டோபர் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட போலீஸ் நோட்டிஸில், நேகா அக்டோபர் 19 அன்று சிறப்பு நிர்வாக நீதிபதி (SEM) முன் ஆஜராகி, "விசாரணைக் காலம் முழுவதும் அமைதியைக் காப்பதாக" ஒரு ஜாமீனுடன் கூடிய ₹10,000 தனிநபர் பிணைப்பத்திரத்தை வழங்க மறுக்கும் காரணத்தை விளக்கம் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இன்று சிபிஐ(எம்எல்) விடுதலை நாடாளுமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போரா, தெருக்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு ஜனநாயக உரிமை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான கேள்விகளை எழுப்புவது எப்படி அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

"நாம் அரசிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றால், யாருடைய அமைதியைக் காக்கிறோம்?" எனக் கேள்வி எழுப்பி, அரசுக்கு எதிராக கேள்வி கேட்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் நேகா.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் எந்தத் திசையில் சென்றாலும், கருத்து வேறுபாடு தெரிவிக்கும் உரிமையை 'அமைதிக்கு அச்சுறுத்தல்' என்று முத்திரை குத்தும் வகையில் கையாளக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

அமைதியான போராட்டங்களையும் ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளையும் பொது ஒழுங்கிற்கு எதிரான மீறல்களாகக் கருதக்கூடாது என்றும், கருத்து வேறுபாடு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நேகா போரா வாதாடி வருகிறார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளுக்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என aisa அமைப்பின் தலைவராக நேகா போரா தொடர்ந்து போராடி வருகிறார். இவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட வழக்குகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.