இந்தியா

புதிய தலைமை நீதிபதி நியமனம்...!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பிரகாஷ் ஸ்ரீவத்சவா நேற்றுடன் ஓய்வு பெற்றார்.  இதையடுத்து மூத்த நீதிபதியாக உள்ள சிவஞானத்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.  இதை ஏற்று கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக சிவஞானத்தை குடியரசு தலைவர் நியமித்தார்.