இந்தியா

புதிய கல்விக் கொள்கை: எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் எதிர்ப்பதாக குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

புதிய தேசியக் கல்விக் கொள்கை அரசியல் ரீதியாகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை:

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.சியாக மாற்ற நடவடிக்கை:

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளதாகவும், உள்ளூர் மொழிகளில் பாடம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கொள்கை ரீதியாக அல்லாமல் அரசியல் ரீதியாகவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் சி.பி.எஸ்.சி பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.