குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய உலகம் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையை சந்தித்து வருகிறது என்றும், யாரும் அவரவர் விரும்பியதை பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அனைத்து வழிகளும் மூடப்படுவதால் பெட்ரோல், எண்ணெய், உரங்களை கொள்முதல் செய்வது கடினமாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது முதல் அனைவரும் தங்களிடம் உள்ள பொருட்களை பாதுகாத்து வைத்ததை சுட்டிக்காட்டினார்.
உலகம் தற்போது புதிய பிரச்சனையை சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் நாளை முதல் உலகிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.