இந்தியா

இரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு புதிய திட்டம்

நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வகையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க இரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பாக இரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி குறைவாக உள்ளதால் இந்தியாவில் அதன் விற்பனை குறைவாகவே உள்ளது. 
இரயில் நிலையங்கள் போக்குவரத்துத் துறையின் முக்கிய இடமாக கருதுவதால் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு  மத்திய அரசின் வேகமாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் இந்திய இரயில்வேக்கு தயாரித்துள்ளது. 
இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க 2030ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக 123 இரயில் நிலையங்களில் உடனடியாக செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.