இந்தியா

முதலமைச்சர்களுக்கு பதவி எப்போது பறிபோகுமோ என்று கவலை... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு...

நாட்டில் எம்.எல்.ஏ முதல் முதலமைச்சர்கள் வரை யாரும் நிம்மதியாக இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

நாட்டில் எம்.எல்.ஏ முதல் முதலமைச்சர்கள் வரை யாரும் நிம்மதியாக இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மனிதர்களின் மனநிலையை நகைச்சுவையாக பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக ஆக முடியவில்லையே என்ற கவலையில் இருப்பதாக கூறிய அவர், பதவி கிடைத்த அமைச்சர்களும் மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்கு நல்ல இலாக்காக்கள் பெற முடியவில்லையே என்ற கவலையில் இருப்பதாக கூறினார்.

நல்ல துறைகள் கிடைக்கப்பெற்ற அமைச்சர்களும் மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்கு முதல்வர் ஆக முடியவில்லையே என்ற கவலை இருப்பதாகவும், முதல்வருக்கு தனது பதவி எப்போது பறிபோகுமோ என்ற கவலை இருப்பதாகவும் நகைச்சுவையாக கூறினார்.

கவிஞர் ஷரத் ஜோஷி எழுதிய கவிதை வரிகளை மேற்கோள் காட்டிய அவர், மாநிலங்களுக்கு பொருந்தாதவர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும், டெல்லிக்கு பொருந்தாதவர்கள் ஆளுநர்களாக்கப்பட்டதாகவும், ஆளுநர்களாக நியமிக்கப்படாதவர்கள் தூதர்களாக நியமனம் செய்யப்பட்டதாகவும் பேசினார்.