இந்தியா

நுபுர் சர்மா சர்ச்சை : தொகுப்பாளர் மீதான வழக்கு அதிரடி மாற்றம்!

Tamil Selvi Selvakumar

பாஜக நிர்வாகி நுபுர்சர்மா பங்கேற்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நவிகா குமார் மீதான வழக்குகளை, டெல்லி காவல்துறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவிகா குமார் மீதான வழக்கு:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கூறிய வகையில் கருத்து வெளியிட்டார். தொடர்ந்து அந்நிகழ்வின் தொகுப்பாளரான நவிகா குமார் மீது, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

டெல்லி காவல்துறைக்கு மாற்ற உத்தரவு:

இவ்வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்றக் கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவிகா குமார் வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். அதேபோன்று, அவர் மீது ஏற்கனவே பதியப்பட்ட மற்றும் இனிமேல் பதியும் வழக்குகளிலும், அடுத்த 8 வாரங்களுக்கு நவிகா குமார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், உத்தரவிட்டுள்ளது.