இந்தியா

ஹோலி பண்டிகையை முன்னிட்டு.. அனல் பறக்கும் பிரதமர் மோடி மாஸ்க்கின் விற்பனை!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி மாஸ்க்கின் விற்பனை அதிகரித்துள்ளது.

Suaif Arsath

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள சந்தைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ மாஸ்க்கின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிக பெரிய வெற்றி பெற்றது. இதனால், பிரதமர் மோடியின்  உருவ மாஸ்க்கிற்கான விற்பனை அதிகரித்துள்ளதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, ஹோலி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு பெரிதும் உற்சாகம் இல்லை. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு, மக்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். பிரதமர் மோடி உருவ மாஸ்க்கின் தேவை அதிகமாக உள்ளது மற்றும் விற்பனையும் நன்றாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களைப் காட்டிலும், இந்த முறை வியாபாரம் நன்றாக இருக்கிறது என்று கடைக்காரர் ஒருவர் கூறினார்.