இந்தியா

காவல்துறையில் பெண்களுக்கான நிலை இப்படியா? மத்திய அரசு கவலை!!

காவல்துறையில் 10 புள்ளி 3 சதவீதம் பெண்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

காவல்துறையில் 10 புள்ளி 3 சதவீதம் பெண்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலின பாகுபாடற்ற சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக காவல் பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 20 லட்சத்து 91 ஆயிரம் பெண் காவலர்கள் பணி அமர்த்தப்பட வேண்டிய இடத்தில் வெறும் 2 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளதாக காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை  விசாரிக்கவும், பெண் குற்றவாளிகளை கையாளவும் போதிய பெண் காவலர்கள் இல்லாத நிலை ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.

இதனை மக்களவையில் சுட்டிக்காட்டி பேசியிருந்த உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், ஆண் காவலர்களுக்கான கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காலி பணி இடங்களை பெண்களை கொண்டு நிரப்ப அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும், 3 பெண் எஸ்ஐக்கள், 10 பெண் கான்ஸ்டபிள்கள் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.