இந்தியா

டெல்லியில் மால்கள், திரையரங்குகள்  திறப்பு... தொற்று குறைவால் தளர்வுகள்...

டெல்லியில் இன்று முதல் சினிமா அரங்குகள், மால்கள் திறக்கப்படுகின்றன.

Malaimurasu Seithigal TV
தலைநகர் டெல்லியில் 2-வது அலைக்கு பின் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. இதையடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில் கூடுதல் தளர்வாக இன்று முதல் மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சினிமா அரங்குகள், ஸ்பா, தியேட்டர்கள், உணவகங்கள், பார்கள், மால்கள் 50 சதவீதம் பேருடன் திறக்கப்படுகிறது. இதேபோல் திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 100 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிர்மான் விகார் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயில் பயணத்திற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.