இந்தியா

தீயணைப்புத் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு!

Malaimurasu Seithigal TV

இந்தியாவிலேயே முதன்முறையாக புதுச்சேரி தீயணைப்புத் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல், தீயணைப்பு துறை அமைச்சர் சாய் சரவணன் காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு வீரர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு இருந்ததோடு அலுவலகத்தை சரியாக பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தீயணைப்பு வாகனங்களை பார்வையிட்டு வாகனங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாய் சரவணன் "புதுச்சேரி மாநிலத்தில் தீயணைப்புத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிநவீன வாகனங்கள் வாங்கப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது தீயணைப்புத் துறையில் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியிட உள்ளதாகவும், புதுச்சேரி தீயணைப்புத் துறையை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.