ஊழல்களுக்கு கேரண்டி தரும் வகையில் எதிர்கட்சிகள் பெங்களூருவில் கூடியுள்ளன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அந்தமான் போர்ட் பிளேயர் சாவர்க்கர் விமான நிலையத்தின், புதிய முனையத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் அந்தமான் வளர்ச்சிக்காக முந்தைய அரசை விட பாஜக 2 மடங்கு நிதி ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார்.
மேற்குவங்க ஊழல் தொடர்பாக வாய்திறக்காமல், குடும்பத்தை வளர்த்து, தேசநலனை புறக்கணிக்கும் வகையில் திட்டமிட, எதிர்கட்சிகள் பெங்களூருவில் கூடியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
எதிர்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் சாதிவெறியின் விஷமும், ஊழல் உத்தரவாதமும் மட்டுமே புரண்டோடுவதாகவும் அவர் கூறினார்.