இந்தியா

ரூ.12 கோடி இழப்பிற்கிடையில்..... ரூ. 820 கோடி வருவாயை பதிவு செய்த அதானி குழுமம்.....

Malaimurasu Seithigal TV

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அதானி குழுமத்திற்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது.   டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகரித்து ரூ.26951 கோடியாக உள்ளது.

தரவுகள்:

அதானி எண்டர்பிரைசஸ் அதனுடைய டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.  இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கையில், அதானி குழுமம் ரூ.820 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிகிறது.  

அதிகரித்த வருவாய்:

கடந்த ஆண்டு இதே காலத்தில் குழுமம் ரூ.12 கோடி நஷ்டம் அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  குழு வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகரித்து ரூ.26951 கோடியாக உள்ளது.

அதிகரித்த லாபம்:

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டை விட அதன் பகுப்பாய்வு, வரிகள், தேய்மானம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறைந்து லாபம் 101 சதவீதம் அதிகரித்து வருவாய்1968 கோடியாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சரிந்த பங்குகள்:

அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் கணக்குகளில் முறைகேடுகள் நடந்ததாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளன. 

வெற்றி குறித்து அதானி:

”எங்கள் அடிப்படை பலம் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்ட செயலாக்க திறன், நிறுவன மேம்பாடு மற்றும் உலகின் சிறந்தவற்றுடன் ஒப்பிடக்கூடிய விதிவிலக்கான செயல்பாடுகளும் பராமரிப்புகளும் ஆகும்.  மேலாண்மை என்பது திறன்களில் உள்ளது. “ எனக் கூறியுள்ளார்.

மேலும் “எங்கள் வெற்றிக்கு நீடித்த செயல்திறன், வலுவான நிர்வாகம் போன்றவை காரணம்.  தற்போதைய சந்தை ஏற்ற இறக்கம் தற்காலிகமானது.” எனவும் தெரிவித்துள்ளார் அதானி.

-நப்பசலையார்