இந்தியா

எரிவாயு விலையேற்றத்திற்கு அரசின் பேராசையே காரணம்-ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருப்பதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருப்பதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு வர்த்தக சபை சார்பில் டாக்டர் ஆர்.கே. சண்முகம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு, இந்திய பொருளாதாரம் - நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார். உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது என்றும், 40 சதவீதம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்துள்ள ப.சிதம்பரம், அரவிந்த் பனகரியா, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்ற பொருளாதார ஆலோசகர்களை தக்க வைத்துகொள்ள மத்திய பா.ஜ.க. அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையேற்றத்திற்கு அரசின் பேராசையே காரணம் என கடுமையாக சாடியுள்ளார்.