பாகிஸ்தானில் தண்டவாளத்தை தகர்த்து பயணிகள் ரெயிலை கடத்தி 100 பயணிகள் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு சென்ற கொண்டிருந்த ரயிலில் 450 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே தண்டவாளத்தை வெடிக்க செய்து பலூச் விடுதலைப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து ரயிலை கடத்தி தங்கள் வசப்படுத்திய கிளர்ச்சியாளர்கள், ராணுவ வீரர்கள் 6 பேரை சுட்டு கொன்றனர். இதையடுத்து 100 பயணிகளை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனா்.
இதனிடையே ரெயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும் பாகிஸ்தான் அரசின் மீட்புக் குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தை அடைந்துள்ள நிலையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்