இந்தியா

ஏ.கே .47 துப்பாக்கியுடன் டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது...

டெல்லியின் லக்ஷ்மி நகரில் பாகிஸ்தான் தீவிரவாதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவனிடம் இருந்து  ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் கையேறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

டெல்லியின் லக்ஷ்மி நகரில் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி முகமது அஸ்ரஃப் என்பவனை சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், ரமேஷ் பார்க், லக்ஷ்மி நகரில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்த நிலையில்,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவனிடம் இருந்து ஒரு கையெறி குண்டு,ஒரு ஏகே 47 துப்பாக்கி,இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.மேலும்,அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது