இந்தியா

மாட்டு இறைச்சியை எடுத்து சென்றவருக்கு அடி, உதை..! கை கூப்பி அழுத அவலம்..!!

கர்நாடக மாநிலத்தில், இறந்த மாட்டை இறைச்சிக்காக எடுத்து சென்றதாக கூறி, கொடூரமாக தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலத்தில், இறந்த மாட்டை இறைச்சிக்காக எடுத்து சென்றதாக கூறி, கொடூரமாக தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு  அருகே இறந்த மாட்டை அப்பகுதியைச் சேர்ந்த இருவர் வாகனத்தில் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட கும்பல் ஒன்று, இறந்த மாட்டை இறைச்சிக்காக எடுத்து செல்வதாக  கூறி, கொடூரமாக தாக்கியுள்ளது. அப்போது வாகனத்தில் இருந்தவர்கள், கைக்கூப்பி தங்களை விட்டு விடும் படி கெஞ்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்ததுடன், இறந்த மாட்டை இறைச்சிக்காக எடுத்து சென்ற இருவரையும் கைது செய்தனர்.