இந்தியா

நாடு முழுவதும் 50 தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க திட்டம்..!!

அடுத்த 3 மாதத்தில் நாடு முழுவதும் 50 தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 2 ஆம் அலையின் அதிதீவிரமான பாதிப்புக்கு மருத்துவ உள்கட்டமைப்புகளை பலப்படுத்தாததே காரணம் என பலவேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் கொரோனா 3 ஆம் அலை தாக்ககூடும் என்றும் இது குறிப்பாக குழந்தைகளையே பாதிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகிறன்றனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சுமார் 50 தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்குள் இவை அமைக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனைகளின் விரிவாக்க நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள மருத்துவமனை கட்டிடத்தை ஒட்டியே இந்த தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவுகளுடன் 100 படுக்கை வசிதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த தற்காலிக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்ட உடன், 6 முதல் 7 வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.