இந்தியா

விசாகப்பட்டினம் கடற்பகுதியில் காவல்படை கப்பல்கள் நிறுத்தம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆய்வு

விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

Malaimurasu Seithigal TV

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிகிறார்.

இதற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள அவர், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுனர் ஹரிசரண், கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60-க்கும்  மேற்பட்ட  கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்,  பங்கேற்கின்றன.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 போர் விமானங்கள் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்துகின்றன. அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன.