இந்தியா

காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது! சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் - ரங்கசாமி !!

காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என புதியதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணையை வழங்கி புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார்.

Tamil Selvi Selvakumar

புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.

இதைத்து தொடர்ந்து விழாவில் பேசிய  முதலமைச்சர் ரங்கசாமி  காவல்துறைக்கு தான் தீய சக்திகளை அடக்கும் சக்தி உள்ளது என்றும் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மனதில் வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  காக்கி சட்டை அணிந்த வுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் பொதுமக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் பேசினார்.