இந்தியா

ராவணனை எரிக்கத் தயாராகும் பாகுபலி!!!

டெல்லியில் நடக்கும் ராம்லீலாவில் ராவணனை, பாகுபலி பிரபாஸ் எரிக்கப் போகிறாராம். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் குஷியைத் தந்துள்ளது!!!

Malaimurasu Seithigal TV

பாகுபலி என்ற படம் மூலம், தென்னிந்திய நடிகராக அறியப்பட்ட நடிகர் பிரபாஸ், உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்கு முன்பு பல வகையான படங்கள் நடித்திருந்தாலும், பாகுபலி வந்த பிறகு தான் பிரபாசிறு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கிளம்பியது. இந்நிலையில், தற்போது, தசராவின் ராவண எரிப்பு சம்பரதாயத்தில், ராமனாகி அவரது உருவ பொம்மையை எரிக்க இருக்கிறார் பிரபாஸ்.

நவராத்திரியான தசரா, வடமாநிலங்களில் பெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நீதியை நீதி வென்றதை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும் இந்த விழாவில், ராமர் ராவணனை வதம் செய்வதை ஆண்டுதோறும் கொண்டாடும் போது, ராவணனின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கும் வழக்கம் உண்டு. மேலும், நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமி அன்று, நரகாசுரனை வதம் செய்த துர்கை அம்மனின் வெற்றியைக் கொண்டாடியும் பல விழாக்கள் கொண்டாடப்படும்.

அவ்வகையில், இந்த வருடம், வருகிற செப்டம்பர் 26ம் தொடங்கும் நவராத்திரி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது. அக்டோபர் 5ம் தேதி முடியும் இந்த நவராத்திரி அதாவது தசரா கொண்டாட்டங்கள், வடமாநிலங்களில் படு பயங்கரமாக நடந்து வரும் நிலையில், லவகுச ராம்லீலா கமிட்டி, டெல்லியில் விழாக்கான ஏற்பாடுகளை, மற்ற வருடங்கள் போலவே இந்த வருடமும் முன்னின்று செய்து வருகிறது.

தனது வித்தியாசமான மற்றும் புதுமையான அலங்காரங்களுக்கு பேர் போன இந்த லவகுச ராம்லீலா கமிட்டி, இந்த ஆண்டு, சுமார் 100 அடி உயரத்திற்கு, பந்தல்கள் கட்டி, ராவணனை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது, அந்த ராவண உருவ பொம்மையை எரிக்கும் பொருப்பு, நடிகர் பிரபாசுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, லவகுச ராம்லீலா கமிட்டி தலைவர் அர்ஜுன் குமார் பேசுகையில், “தற்போது தயாராகி வரும் ஆதிபுருஷ் படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் அவதாரத்தில் நடிக்க இருக்கும் நிலையில், தசராவில் தீமையை அழிக்கும் பொருப்பு அவரைத் தவிற வேறு யாருக்கும் பொறுந்தாது.” என கூறி பெருமிதம் கொள்கிறார்.

மேலும் பேசிய அவர், எப்போதும் போல இந்த ஆண்டும், ராவணனுடன் கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் உருவ பொம்மைகளும் நிலவப்பட்டு, நடிகர் பிரபாஸ் தனது தீப்பற்றும் அம்பை காற்றில் பறக்க விடுவார். பின், அனைத்து உருவ பொம்மைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் அவை எரிக்கப்படும் என விழா குறித்து தெரிவித்தார்.

பத்தாம் நாளான தசமி திதியில், அதாவது விஜயதசமியில் கொண்டாடப்படும் இந்த விழாவானது, அபகரன் காலத்தில், அஸ்வினி மாதத்தில், ஷுக்ள பக்‌ஷ நேரத்தில் எரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.