இந்தியா

குடியரசு தலைவர் தேர்தல் - வெங்கையா நாயுடு, அமித் ஷா ஆலோசனை!

Tamil Selvi Selvakumar

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.