இந்தியா

நாசி வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்...!

Malaimurasu Seithigal TV

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி செலுத்தும் கோவிட் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

கொரோனா தொற்றுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில் மூக்கின் வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்ட்ரா நேசல் கோவிட் - 19 (iNCOVACC) மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி மற்றும் பயோலாஜிக்கல் இ லிமிடெட்டின் கோர்ப்வேக்ஸ் உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக கோவின் இணையதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், உலகின் முதல் இன்ட்ரா நேசல் கோவிட் - 19 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊசி இல்லாத நாசி தடுப்பூசிக்கான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணாயம் செய்துள்ளது. அந்த வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 ஆகவும் (5 சதவீத ஜிஎஸ்டி தவிர) மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரூ.325 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி, ஜனவரி நான்காவது வாரத்தில் வெளியிடப்படும்  எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

-- சுஜிதா ஜோதி