இந்தியா

குப்பை தொட்டியில் பிரதமர், உ.பி.முதல்வர் புகைப்படம்: மாநகராட்சி ஊழியர் பணிநீக்கம்!

Tamil Selvi Selvakumar

உத்தரபிரதேசத்தில், குப்பைத்தொட்டியில் போடப்பட்ட  பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப் படத்தை வண்டியில் வைத்துக்கொண்டு சென்றதால் மாநகராட்சி ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய பிரமுகர்களின் படங்களை குப்பை வண்டியில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர்:

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில்  அண்மையில் குப்பைகளை எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர் ஒருவரின் வாகனத்தில் பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் புகைப்படம் கிடந்துள்ளது.

இணையத்தில் வைரலான வீடியோ:

அப்போது அந்த வழியில் புனித பயணமாக சென்ற ராஜஸ்தானை சேர்ந்த சிலர் இதனை அடையாளம் கண்டு,   சுத்தம் செய்து எடுத்து சென்றுள்ளனர். அதேசமயம் இந்த நிகழ்வை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

மாநகராட்சி ஊழியர் பணிநீக்கம்:

இந்தநிலையில் வீடியோ வைரலானதை அடுத்து, அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.