இந்தியா

தலைமைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி...!!!

Malaimurasu Seithigal TV

பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து அவரது தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளார்.

பிரதமர் வாழ்த்து:

பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து அவரது தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளார்.  பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

”பா.ஜ.க.வில் புதிய உற்சாகத்தையும், புதிய ஆற்றலையும் தனது தலைமைத்துவத்தால் நிரப்பும் பணியை அவர் சிறப்பாக செய்துள்ளார்.  இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருவாராக.” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்